5 Oct 2009

ஒரு தலை பூ. . .

அன்பே!
என் மனதில்
விதை தூவி,
செடி வளர்ந்து,
மலர்கள்
மலர ஆரம்பித்து விட்டன. . .
உன் நினைவாக!

இம் மலரின் நாற்றத்தை
நீ
அறிவது எப்பொழுது. . .

என்
தோட்டத்து மலரை
நீ சூடுவாய் யென்று. . .

உதிராமல் உனக்காக
மணம் வீசிக் கொண்டு யிருக்கிறேன்...
உன்
வருகையை எதிர்நோக்கி. . .
இப்படிக்கு,

-கார்த்திக்.வெ.

2 Oct 2009

இறுதி தினம். . .

பூக்கும்
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .

நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .

நட்புடன் என்றும். . .

-கார்த்திக்.வெ.