6 May 2009

கருவிழிச் சிறை!

அவள்
கண்ணின் கருவிழிக்குள்
சிறைப்பட்ட
என்னால் சிறகடித்து பறக்க
முடியவில்லை...
சிறகொடிந்து கிடக்கிறேன்!

என்னை
சிறைப்படுத்திய
கண்ணின் மீது
எனக்கு
கோபம் இல்லை...
ஆனால்,
தாகம் உண்டு !
அவள்
கண்ணின் கருணைப்
பார்வைக்காக...

அவள்
கண்ணைப்
பார்த்த எனக்கு
அவள்
சரீரத்தை பார்க்க
மனம் வரவில்லை...
காரணம்?
என்
உயிர் மீது உள்ள
பயம்!

இக்கவிதைகுச் சொந்தமான
அவளிடம் கூட
இக்கவிதையை
சொல்ல தயக்கம் ..!
இருவருக்குமிடையில்
ஊடல் பிறந்து
விடுமோ என்று ...
பிறந்தால்
என்
வாழ்நாள் முழுவதும்
அவள்
கண் சிறையில்தான் ...

குயிலும்
கவி பாடும் ...
காகமும்
காதல் கவிதை இசைக்கும் ...
அவள்
கண்ணின்
கருவிழியை வர்ணிக்கும்
பொழுது...

-கார்த்திக்.வெ

கானல் நதி!

முல்லைக்கு
தேர் கொடுத்தான் பாரி...

ஆனால்,
அந்த முல்லைக்கு
நறுமணம் கிடைத்தது உன்னால்!
நீ
அதனை சூட்டியதால்...

தென்றலும்
உன்னிடம் அனுமதி கேட்கும்,
உன்
கூந்தலை தீண்டி
உன்
கூந்தலின் நறுமணத்தை
இவ்வுலகிற்கு பரப்பிட...

கடற்கரையில்
நீ நடந்து
செல்லும் பொழுது
கடல் வாழ் உயிரினங்கள்
கண்டு வியக்கும்!
இதுதான்
நதியோ யென்று!

உன்
கூந்தல்முடி
ஒவ்வொன்றும்
முடிவில்லா கவிதை
வரிகள்....

இக்கவிதை வரிகளை
முடிக்க மனமின்றி
முடிக்கிறேன்...
தயக்கத்துடன்!

-கார்த்திக்.வெ