27 Sept 2009

நீ - நான்

கவிதைகள்
ததும்பி நிரம்பிய
கருவூலமாய் ,
நடமாடும் பொக்கிஷம் - நீ

ரசனையற்ற
பார்வை கொண்ட,
வர்ணிக்க வார்த்தையற்ற
கற்சிலை யாய் - நான்

-கார்த்திக்.வெ.

மழை. . .

வாசல் வரை
என்னை நாடி வரும்
நண்பனை வரவேற்க
வீதி வரை சென்றேன்!
கையில் குடையேஇன்றி. . .
முகத்தில் புன்னகை பூ பூக்க . . .

அவன் தூவும்
புன்னகை மலரில் நனைந்தேன்!
என் துக்கம் மறந்து. . .

-கார்த்திக்.வெ.

10 Sept 2009

அழகுச் சிறை!

கருமையும்
அழகு யென்று
உணர்ந்தேன்!
அவள்
கண்ணின் கருவிழியை
பார்க்கும் பொழுது...

அவள்
கண் சிறையில்
இருப்பதால் யென்னவோ!
இவ்வுலகம்
எனக்கு
இருளாக காட்சி யழிக்கிறது!

-கார்த்திக்.வெ.

மாற்றம் ?

இளவேநீர்
காலமாய் பூத்து குலுங்கிய
நம் நட்பு...

அவள்
அருகில் இருக்கும்
பொழுது மட்டும்
இலையுதிர் காலமாய்
மாறியது யேன்?
என்
இனிய நண்பனே!

எதிர்நோக்கும் மாற்றம்
நட்பில் அல்ல...

-கார்த்திக்.வெ.

3 Sept 2009

நினைவுச் சின்னம்!



அதிகாலை
உதயமாகும் சூரியன் கூட
ஒரு நாள்
உதயமாகாமல் போகலாம்...

பூக்க துடிக்கும்
மொட்டுக்கள் கூட
பூக்காமல் போகலாம்...

மலர்ந்த மலர்களும் கூட
வாசம் வீசாமல் போகலாம்...

காதலின் சின்னமாக கருதப்படும்
தாஜ்மஹால் கூட
காலப் போக்கில்
அழிந்து போகலாம்...

அந்தி மாலையில்
தோன்றும் வானவில் கூட
ஒளிராமல் போகலாம்...

ஆனால்
நான் உன் மீது கொண்ட
அன்பு மட்டும்
ஒருபோதும் அழியப் போவதில்லை!

நான் மடிந்தாலும்
என் நினைவு
என்றும் உன்னைச் சுற்றியே!
காதலின் சின்னமாக...


-கார்த்திக்.வெ