ஆகஸ்ட் பதினான்கு
மாலை மூன்று மணியளவில்,
மக்கள் கூட்டம்
பரவலாக அலைமோதும்
வடபழனி பேருந்து நிலையத்தில்...
மனிதனை மிருகத்திட மிருந்து வேறுபடுத்தும் ,
உடை, உறைவிடம் கூட இன்றி
தவிக்கும் நாடோடி மனிதர்களிடம்...
நான்கு சக்கர குளிர் வாகனத்தில்
ஊர்ந்து வந்த காவலர்,
இரத்தத்தில் ஊறிப்போன
லத்தியால் துரத்தப்படும் கும்பல்
செல்லும் திசை யறியாமல் சிதறி
விரட்டி யடிக்கப் பட்டனர்...
ஓழுங்கு நடைமுறை திட்டத்தின் கீழ்....
காரணம் ?
நாளை சுதந்திர தினமாம் !
வாழ்க ஜனநாயகம் !
14 Aug 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment